Srilankan Tamil Poet - Su.Vilvaraththinam







அறிமுகம்

படைப்புகள்

  காற்றுக்கு வந்த சோகம் - கவிதை
  உராய்வு - கவிதை
  புள்வாய்த் தூது - கவிதை
  ஸ்தல புராணம் - கவிதை
  தோப்பிழந்த குயிலின் துயர் - கவிதை
    



<< August 2017 >>
Sun Mon Tue Wed Thu Fri Sat
 01 02 03 04 05
06 07 08 09 10 11 12
13 14 15 16 17 18 19
20 21 22 23 24 25 26
27 28 29 30 31


Contact Me

If you want to be updated on this weblog Enter your email here:


rss feed

blogdrive

தோப்பிழந்த குயிலின் துயர்



திருக்கோணமலை வீதியன்றில்
விலைப்பட்டிருந்தது நுங்கு.

வியப்பால்
குழிழ் திறந்தென் விழிகள்
மூடாமலேயே நின்றிருக்க
நீள நடந்தன நினைவுகள்
நிமிர் பனங்கூடலாம்
தீவினை நோக்கி.

நுங்குக் காலம்.

அணில் கொறித்து வீழ்ந்தவை தேடி
பிள்ளைகள் வெட்டி உணக்கண்ட
மனையாள்
பார்வையாலேயே எனைத் தூண்ட
மறுநாளே
நூறுநூறு நுங்குகள்
முன்றலில்.

குதூகலந்தான்.

குமிழ் நீக்கி
ஒவ்வொன்றாய் வெட்டிய நுங்கின் கண்கள்
இனிதூறத் திறந்து உண்டால் அம்ம, அமிழ்தம்.

மனையாளும் மக்களும்
மகிழினிய சுற்றமுமாய்
சூழவிருந்துண்ட சுகம்
இன்னும் நினைவில் கண்
நெறிக்கும் நுங்கின் அமிழ்தாய்
உரைசலிடும்.

உரைசலிட உரைசலிட
மெல்ல மெல்ல
தித்திப்பின் அடியில்
இற்றைநாட் துயரின் கயர் பிரளும்.

தொலைதீவின் அவலம்
தொண்டைக்குழிவரை
திரண்டுவரும்.

திரண்டிருந்தோம் பனந்தோப்பாய்
தொலைதீவின் மக்கள் நாம்
இந்நாள்
நுங்கின் குலைபோல்
சிதறுண்டு போனோம்
தெறித்தோடிய ஒன்றின் சிதைவாய்
திருக்கோணமலையில் நான்
திக்குக்கு ஒருவராய் எம்மவர்கள்.

ஒக்க இருந்து உயிர் வளர்த்தோமே
எப்ப வரும் இனிய எம் நாட்கள்?

கூரையின் தாழ்வார நீர்கோப்பாய்
தொடர் நினைவுகள் துயர் கோர்க்க
நின்றிருந்தேன்
விழிகளில்
திரண்டு
சுட்டபழம் போல்
தொப்பென்று விழுந்தன
நீர்த்துளிகள்.

துடைத்தபடி நடக்கிறேன்.
தோப்பிழந்த குயிலின் தூரத்துக் கசிவோ
தொடர்ந்தபடி.


ealamlit @ 12/25/2003   Make a comment                                                          முகப்பு


Links

http://www.geotamil.com/pathivukal/pathivukal_pongal2003/poem_VILVARATHTHINAM.html

ealamlit @ 1/4/2004   Make a comment                                                          முகப்பு


Previous Page